தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு உத்தரவு: வீட்டிற்குச் செல்ல 200 கி.மீ., நடந்த கர்ப்பிணி

லக்னோ: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனது வீட்டிற்குச் செல்ல கர்ப்பிணி ஒருவர் 200 கி.மீ., நடந்துச் சென்றுள்ளார்.

pregnant-woman-walks-200-km
pregnant-woman-walks-200-km

By

Published : Mar 31, 2020, 8:19 PM IST

உத்திரப் பிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் - அஞ்சு தேவி தம்பதியினர், நொய்டாவில் கட்டுமானத் தளத்தில் தினக்கூலியாகப் பணிபுரிந்து வந்தனர். கரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

அதனால் நிலுவைத் தொகையைக் கட்ட கூலிவேலை செய்துவந்த தம்பதிகளுக்கு பணம், உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதன் காரணமாக அவர்கள் தங்களின் சொந்த ஊரான ஜலான் மாவட்டம் அன்டா கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். அதையடுத்து அவர்கள் மார்ச் 27ஆம் தேதி காலை கிளம்பி 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து 28ஆம் தேதி இரவு தங்களது சொந்த கிராமத்தை அடைந்தனர்.

அது குறித்து அசோக் கூறுகையில், எங்களுக்கு நிலுவைத் தொகையிருந்ததால் ஊரடங்கு உத்தரவிற்கு முன் கிளம்ப முடியவில்லை. அதையடுத்து நாங்கள் சப்பாத்திகளைக் கட்டிக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம். வழியில் சிலர் எங்களுக்கு உணவளித்தனர். நீண்டப் பயணத்திற்குப் பிறகு வீட்டை அடைந்தது நிம்மதியளிக்கிறது எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:முதலமைச்சர் முதல் ஊழியர் வரை... ஒருமாத சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த மகாராஷ்டிரா அரசு

ABOUT THE AUTHOR

...view details