தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துப்பாக்கிச் சூடு  நடுவில் கர்ப்பிணியை மீட்ட பாதுகாப்புப் படையினர்! - fortified bunker

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளைச் சுட்டுக் கொல்லும் முயற்சியின் போது, இடையில் மாட்டிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்புப் படையினர் உயிரைப் பணயம் வைத்து மீட்டனர்.

ஸ்ரீநகர்
ஸ்ரீநகர்

By

Published : Apr 8, 2020, 5:22 PM IST

காஷ்மீரில் அரம்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப் வீரர்கள், உள்ளூர் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே தூப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், தீவிரவாதிகள் பதுங்கு குழியில் மறைந்திருந்து தூப்பாக்கிச் சூடு நடத்தியதால், அந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் வெடிக்க வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

இச்சண்டை நடக்கும் போதே, அங்கு சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண், உதவியாளரை, பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருந்துத் தப்பிக்க தலைமறைவான தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:இரண்டு நாள்களில் 15 குரங்குகள் உயிரிழப்பு - கரோனாவா, விஷமா அச்சத்தில் பொது மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details