கர்நாடகாவில் கர்புர்கி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர், கிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்று அஞ்சிய மருத்துவ ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனைக்கு முன்பாகவே குழந்தை பிறந்துள்ளது.
கரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை
கர்நாடகா மாநிலத்தில் கர்புர்கி மாவட்டத்தில் கர்ப்பிணிக்கு கிம்ஸ் மருத்துவமனை முன்பாக குழந்தை பிறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
Pregnant woman gave birth to a baby infront of GIMS Hospital
இதன் பின்பு பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர். அதன் நீட்சியாக, அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையே அந்தக் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மருத்துவ ஊழியர்கள் அவரை செவிமடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..."மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் " மம்தாவுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல்