ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ளது துபாரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தபோது, சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வசதி செய்துத் தர மறுத்துள்ளனர்.
சாலை வசதி இல்லாததால் வழியிலேயே நடந்த பிரசவம்! - - ஒடிசாவில் வழியில் நடந்த பிரசவம்
ஒடிசா: சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் கந்தமால் மாவட்டத்தில் நடந்துள்ளது.
![சாலை வசதி இல்லாததால் வழியிலேயே நடந்த பிரசவம்! -](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4111853-thumbnail-3x2-pregnant.jpg)
பெண்
சாலை வசதி இல்லாததால் வழியிலேயே குழந்தை பெற்ற பெண்
இந்நிலையில், செய்வதறியாது திகைத்த கர்ப்பிணியின் உறவினர்கள், கட்டிலில் வைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, வழியிலேயே கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Last Updated : Aug 12, 2019, 1:36 PM IST