உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாஜ்ராஜில் நேற்று இரவு கொரான் தெஹ்ஸிலின் பகுதியில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிர்பாராத வகையில், திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில், காரில் இருந்த நான்கு பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மரத்தில் மோதியதில் தீப்பிடித்து எரிந்த கார்... நால்வர் உயிரிழப்பு! - உபியில் உடல் கருகி நால்வர் உயிரிழப்பு
லக்னோ: நள்ளிரவில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார் தீப்பிடித்து எரிந்ததில், நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
cc
பின்னர், அதிகாலையில் அவ்வழியே வந்த மக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, விரைந்த வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.