தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரமலான்போது வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள் - தப்லிக் ஜமாஅத் தலைவர் - இந்தியாவில் கரோனா

டெல்லி: ரமலான் மாதத்தின்போது ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து வீட்டிலேயே அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும் என்று தப்லிக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ramzan

By

Published : Apr 21, 2020, 10:33 AM IST

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் மிகவும் மோசமாகிவருகிறது. நாட்டில் வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 விழுக்காட்டினர் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதைச் சுட்டித்தாட்டிய டெல்லி முதலைச்சர் அரவிந்த் கெஜிர்வால் அம்மாநிலம் தற்போது மிக மோசமான போரை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ரமலான் மாதத்தில் மக்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தப்லிக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "அரசு வெளியிட்டுள்ள வழிபாடுகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். அனைவரும் வீட்டிலேயே பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம். அப்போதுகூட வெளியாள்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாக 7.5 நாள்கள் ஆகிறது: மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details