தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு! - குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு செப்டிக் ஷாக் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

pranab-mukherjees-health-declines-hospital
pranab-mukherjees-health-declines-hospital

By

Published : Aug 31, 2020, 12:41 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) ஆகஸ்ட் 9ஆம் தேதி வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதையடுத்து, டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பின்னர், பிரணாப் முகர்ஜி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். ஆழ்ந்த கோமா நிலையில் உள்ள அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், அவருக்கு செப்டிக் ஷாக் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆழ்ந்த கோமா நிலையில் இருந்தாலும் அவரது ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details