முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியானது.
இதனால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வீண் வதந்திகள் பரவின.
இதனையடுத்து ட்வீட் செய்துள்ள பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி, “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். எனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'எனது தந்தைக்கு ஏற்றதைக் கடவுள் செய்வார்' - பிரணாப் முகர்ஜியின் மகள் உருக்கம்