17ஆவது மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குபதிவு கடந்த ஞாயிறன்று நடந்து முடிந்ததையடுத்து, தேர்தலை சிறப்பாக நடத்தியதாக தேர்தல் ஆணையத்தை முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புகழ்ந்து பேசினார். நேற்று டெல்லியில் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது,
'தேர்தல் ஆணையம் கனகச்சிதமாக செயல்பட்டது'-பிரணாப் புகழாரம் - முன்னாள் குடியரசு தலைவர்
டெல்லி: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருகிறது என்று எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துவந்த நிலையில், 'தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், குறையே சொல்ல முடியாத அளவுக்கு, கனகச்சிதமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதால், ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளது என்று எதிர்கட்சிகள் முன்வைத்த பல்வேறு குற்றசாட்டுகளுக்கும், நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறியுள்ளது என காங்கிரஸ் உட்பட பல எதிர் கட்சிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், பிரணாப் முக்கர்ஜியின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.