தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமரின் முதன்மைச்செயலாளராக பிரமோத் குமார் மிஸ்ரா நியமனம்! - pramod Kumar Mishra

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதன்மைச் செயலாளராக பிரமோத் குமார் மிஸ்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரமோத் குமார் மிஸ்ரா

By

Published : Sep 11, 2019, 4:53 PM IST


பிரதமரின் முதன்மை ஆலோசகராகவும், செயலாளராகவும் இருந்த நிர்பேந்திரா மிஸ்ரா இந்த பதவியில் இருந்து நீங்கியதால்,
கூடுதல் முதன்மை ஆலோசகராக இருந்து வந்த பிரமோத் மிஸ்ரா இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் அமைச்சரவை பரிந்துரை கமிட்டியில்(Appointment committee of cabinet), பிரதமர் அலுவலகத்தின் உள்ள அலுவலர்களின் சிறப்பு அலுவலராகவும் (OSD) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பணிகளின் பொறுப்புகளை பிரமோத் குமார் மிஸ்ரா இன்று முதல் தொடர்கிறார்.

சிறப்பு அலுவலரின் பணிக்காலம் பிரதமர் ஆட்சி காலமாகவோ அல்லது பதவி விலகும்வரையோ தொடரலாம் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details