மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக பிரக்யா சிங் தாகூர் போட்டியிடுகிறார். இவர் மேல்கான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் 8 வருடம் இருந்து தற்போது பிணையில் வெளி வந்துள்ளார். இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பேசி வருகிறார்.
'நாதுராம் கோட்சே என்றுமே ஒரு தேச பக்தர்தான்..!' - பிரக்யா சிங் தாகூர் சர்ச்சை பேச்சு - பிரக்யா சிங் தாகூர் சர்ச்சை
போபால்: 'நாதுராம் கோட்சே என்றுமே தேச பக்தராகத்தான் திகழ்ந்தார். அவரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்று, போபால் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரக்யா சிங் தாகூர்
இந்நிலையில் போபால் மக்களவை தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா சிங் தாகூர், "நாதுராம் கோட்சே அன்றும், இன்றும், என்றும் தேச பக்தராக தான் திகழ்ந்தார். அவரை தீவிரவாதி என சொல்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் சரியான பதிலடி திருப்பிக் கொடுக்கப்படும்" என்றார்.
கோட்சேவை தேச பகதர் எனக் கூறி மற்றொரு சர்ச்சையில் பிரக்யா சிங் தாகூர் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.