மால்கான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட போபால் மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர் மக்களவை உறுப்பினராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது தன் பெயருடன் ஆன்மிக குரு பூர்ன் சேத்னந்த் அவ்தேஷானந்த் கிரி பெயரைச் சேர்த்து பிரக்யா சிங் தாகூர் பதவியேற்க முயன்றார்.
மீண்டும் தனது சர்ச்சை சாட்டையை சுழற்றிய பிரக்யா!
டெல்லி: தன் பெயருடன் ஆன்மிக குரு பூர்ன் சேத்னந்த் அவ்தேஷானந்த் கிரி (Poorn Chetnand Avdheshanand Giri) பெயரைச் சேர்த்து மக்களவை உறுப்பினராக பிரக்யா சிங் தாகூர் நேற்று பதவியேற்றதால் சர்ச்சை எழுந்தது.
pragya
ஆனால் அதிகாரப்பூர்வமான பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கூறி தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் அவரை தடுத்து நிறுத்தினார். பிறகும்கூட அவர் அதிகாரப்பூர்வமற்ற பெயரை பயன்படுத்தியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை கோஷம் எழுப்பி தடுத்து நிறுத்தினர். கடைசியாக அவரின் அதிகாரப்பூர்வமான பெயரை பயன்படுத்தி சமஸ்கிருத மொழியில் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.