போபால் மக்களவை தொகுதியில் செய்தியாளரை சந்தித்த பிரக்யா சிங் தாகூர், நாதுராம் கோட்சே அன்றும், இன்றும், என்றும் தேச பக்தராக தான் திகழ்ந்தார் எனவும், அவரை தீவிரவாதி என சொல்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் சரியான பதிலடி திருப்பி கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. பாஜக இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியது.
'என்னை மன்னிச்சுடுங்க.. சொன்னது தப்புதான்..!' - பின்வாங்கிய பிரக்யா சிங் தாகூர் - பிரக்யா சிங் தாகூர்
டெல்லி: கோட்சே ஒரு தேச பக்தர் என பிரக்யா சிங் தாகூர் கூறியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் தான் சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரக்யா சிங் தாகூர்
இதுகுறித்து பிரக்யா சிங் தாகூர், "கோட்சே பற்றி நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து. இது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். என் கருத்து ஊடகத்தினால் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு காந்தி செய்ததை யாராலும் மறுக்க முடியாது" என்றார்.