நாடு முழுவதும் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
கண்ணீர் மல்க கட்டித் தழுவிய உமா பாரதி - பிரக்யா! வைரல் வீடியோ - uma barti
போபால்: பாஜக தலைவர்கள் உமா பாரதியும் - பிரக்யா சிங் தாக்கூரும் உணர்ச்சி வசத்தில் கண்ணீர் மல்க கட்டித் தழுவிக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
uma barti
இந்தத் தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் உமா பாரதியை சந்திப்பதற்காக, அவரது இல்லத்திற்கு பிரக்யா சிங் தாக்கூர் சென்றார். அப்போது, உமா பாரதியும் பிரக்யாவும் உணர்ச்சிவசத்தில் ஒருவரையொருவர் கண்ணீர் மல்க கட்டித் தழுவிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.