தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹேமந்த் கர்கரே குறித்து சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்- சாத்வி பிரக்யா சிங்

மகாராஷ்டிரா: மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேகுறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சாத்வி பிரக்யா சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

சாத்வி பிராக்யா சிங்

By

Published : Apr 20, 2019, 7:53 AM IST

Updated : Apr 20, 2019, 10:43 AM IST

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திக்விஜயசிங்கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ‘மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்து லாக்கப்பில் அடைத்துவைத்து விசாரணை நடத்திய ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகளவில் சித்ரவதை செய்தார்.

என்னை இப்படி கொடுமைப்படுத்தும், நீயும் உன் குடும்பத்தாரும் நாசமாக போவீர்கள்! என்று நான் அப்போது அவரை சபித்தேன். அதேபோல், 2013ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற தாக்குதலின்போது அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.மும்பை தாக்குதலின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற கடமையாற்றி வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் தியாகத்தை கேவலப்படுத்தும் விதமாக இப்படி பேசிய சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ‘ ஹேமந்த் கர்கரேவை பற்றி நான் முன்பு தெரிவித்த கருத்து நமது நாட்டின் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் நான் கூறியதை திரும்பப் பெறுகிறேன்.நமது எதிரிகளின் துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட அவரது தியாகத்தை மதித்து, மன்னிப்பும் கோருகிறேன்’என சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் நேற்று தெரிவித்துள்ளார்

Last Updated : Apr 20, 2019, 10:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details