நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டுத் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மத்தியில் ஆளும் பாஜக சார்பில் விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவதாம் நடைபெற்றுவருகிறது.
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பத்தூர் மக்களை உறுப்பினர், பி.ஆர்.நடராஜன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "விவசாயிகளை பாதிக்கும் இந்த சட்ட முன்முடிவு, கரோனா வைரஸ் தாக்கத்தினால் மறைக்கப்படுகிறது. கார்ப்ரேட்களுக்கு இணையாக விவசாயிகளை சந்தையில் போட்டிக்கு இந்த சட்டம் அழைக்கிறது. ஒழுங்குமுறை அமைப்புகள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்காது. உள்ளூர் வர்த்தகர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் தான் இதன்மூலம் லாபம் அடைவார்கள்.