யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால், புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தனியார் மயமாகும் மின்துறை: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - காரைக்கால் தலைமை தபால் நிலையம்
புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கம் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மின் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தனியார் மயமாகும் மின்துறை: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அதன் தொடர்ச்சியாக, காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று (அக்டோபர் 22) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.