தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கருத்து சுதந்திரம் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது - பிரசாந்த் பூஷன்! - உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு

டெல்லி: கருத்தைத் தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதக் கூடாது என மூத்த வழக்குரைஞர் பிரசாந்த பூஷன் தெரிவித்துள்ளார்.

PB
PB

By

Published : Aug 3, 2020, 10:51 PM IST

மூத்த வழக்குரைஞரான பிரசாந்த் பூஷன், தன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அதில், தனது கருத்துகள் குறித்து தன் நிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், நீதிக்கான குரலை வலுப்படுத்தும் விதமாக சட்டப் பிரிவு 129 விமர்சனத்திற்கான வழிவகையை உறுதிபடுத்துகிறது.

இதை முடக்கும் விதமாக நீதிமன்றங்கள் கருத்துகளை அவமதிப்பாகக் கருதுவது முறையல்ல. நீதிமன்றங்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பொறுப்பை உணரச் செய்யும் நடவடிக்கை அவமதிப்பாகாது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கோவிட் 19 லாக்-டவுனால் குடிபெயர் தொழிலாளர் சந்தித்த துயரம், பீமா கோரேகான் விவகாரத்தில் சமூக செயல்பாட்டாளர்களின் கைது உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்.

இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி, பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம்சாட்டி கடந்த ஜூலை 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க:ரக்சா பந்தன் பரிசு: 14 லட்சம் முகக்கவசங்களை மக்களுக்கு வழங்கிய காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details