தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனைவி மீது புகாரளிக்க 2 நாட்கள் நடந்து சென்ற கணவன்! - buttu ram

சட்டீஸ்கர்: பயணச் செலவுக்குப் பணம் இல்லாததால் தன் குடும்பப் பிரச்னை குறித்து புகாரளிக்க 40 கிமீ தொலைவிலுள்ள காவல் நிலையத்திற்கு ஒருவர் நடந்தே சென்றுள்ளார்.

புட்டு ராம்

By

Published : Jul 18, 2019, 11:48 AM IST

கார்ம்சாரியா கிராமத்தில் புட்டு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்று இன்னொருவருடன் வாழ்ந்து வருகிறார். கடந்த இரு வருடங்களாக புட்டு ராம் தனியாக இருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர், தன் குழந்தைகளையாவது தன்னிடம் திருப்பி அளிக்கக்கோரி காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் இருந்து காவல் நிலையம் சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளதால், பேருந்து மூலமாகத் தான் செல்ல வேண்டும்.

புட்டு ராம்

மேலும் பேருந்தில் செல்ல இவரிடம் பணமில்லாத காரணத்தால் 2 நாட்கள் நடந்தே பயணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையறிந்த காவல் அலுவலர்கள் புகாரைப் பதிவு செய்த பின் அவருக்குப் பணம் அளித்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.இவர் மலைவாழ் பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்படுவது ஆட்சியாளர்களின் அலட்சியத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

ABOUT THE AUTHOR

...view details