ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian+Exit = Brexit) என்று அழைக்கிறார்கள். இந்த வெளியேற்றத்தைச் சுமுகமாக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் 'பிரெக்ஸிட் விரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் எம்.பி.க்களின் ஆதரவைப் பெறமுடியாத காரணத்தால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரெசா மே தன் பதவியைக் கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பிரெக்ஸிட்டை முடித்து வைக்கத் தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஆனால், பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் (No deal Brexit) நடவடிக்கைகளை போரிஸ் ஜான்சன் மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தியாவின் தோழமை நாடாகும் நெதர்லாந்து! - India netherland news
ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் இந்திய நிறுவனங்களுக்கு நெதர்லாந்து முக்கியத்துவம் அளிக்கும் என அந்நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், பிரட்டனின் இந்த முடிவை நாங்கள் மறுத்தாலும். இதனால் இந்திய நிறுவனங்கள் நெதர்லாந்தில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. எங்களுக்கு இந்தியா எப்போதும் முக்கியமான நாடுதான். இந்தியாவிடம் வியக்கத்தக்க தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு ஆகியவை உள்ளது. மூதலீடு செய்ய அது சிறந்த இடம். இந்த மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த பயணத்தில் 25ஆவது தொழில்நுட்ப மாநாடு, நீர் மேலாண்மை, அதன் ஜனநாயகம் ஆகியவை குறித்து அறிய ஆர்வமாக உள்ளேன்" என்றார்.