தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பத்ரிநாத் ஆலயம்! - Badrinath shrine

டேராடூன்: இமயமலையில் உள்ள பத்ரிநாத் விஷ்ணு கோயில், ஆறு மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பத்ரிநாத் ஆலயம்

By

Published : May 10, 2019, 1:27 PM IST

சார்தாம் ஆலயங்களில் ஒன்றான பத்ரிநாத் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் நடை வழிபாட்டுக்காக இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

ஆறு மாத இடைவெளிக்குப் பின் திறக்கப்படும் கோயிலில் வழிபாடு செய்ய ஆயிரக்கணக்காண பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

மற்ற சார்தாம் ஆலயங்களான கங்கோத்ரியும், யமுனோத்ரியும் கடந்த மே 7ஆம் தேதி திறக்கப்பட்டன. மற்றொரு ஆலயமான கேதார்நாத் மே 9ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பத்ரிநாத் ஆலயம்

இந்நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி கடும் பனி காரணமாக பத்ரிநாத் ஆலயம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details