கேரளா மாநிலத்திற்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் வருகை தந்த போது, கேரள அரசு பாம்பு படகு பந்தயத்தை (சுந்தன் வல்லம் காளி) சிறப்பாக நடத்தியது. இந்த சிறப்பு நிகழ்வால் தான் நேரு டிராபி படகு பந்தயம் தொடங்கியது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் பேக் வாட்டர் ஃபீஸ்டா நிகழ்வு நடைபெற்று வருகிறது.
கடந்த 68 ஆண்டுகளில் முதன்முறையாக ரத்தான கேரளாவின் நேரு டிராபி படகுப் பந்தயம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற நேரு டிராபி படகுப் பந்தயம், கரோனா தொற்றின் காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
boat
இதற்கு முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளும் வெள்ளத்தால் நேரு டிராபி படகு பந்தயம் ஒத்திவைக்கப்பட்டு, சிறிது நாள்களுக்கு பிறகு நடைபெற்றது. ஆனால், இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆலப்புழா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து ரெகாட்டா காதலர்களின் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது.
கடந்த 68 ஆண்டுகளில் முதன்முறையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.