தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி இடைத்தேர்தல் - காங்கிரஸ் vs என்ஆர் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்! - காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

ஜான்குமார்

By

Published : Sep 28, 2019, 3:20 PM IST


புதுவையில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்-திமுக. கம்யுனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும். என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிடுகின்றனர்.

இதில் காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் நேரடியாக களம் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளரான ஜான்குமார் போட்டியிடுகிறார்.

ஆரம்பத்திலிருந்தே இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வந்த என்ஆர் காங் திடிரென களத்தில் குதித்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு அளித்துள்ளது. இதனையடுத்து வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ நேருவை என்ஆர் காங்கிரஸ் களம் இறக்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகவுள்ளது.

இதனால் இடைத்தேர்தல் களத்தில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி மோதல் உறுதியாகியுள்ளது. இரு வேட்பாளர்களும் திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பார்க்க : நாம் தமிழர் கட்சி புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details