புதுச்சேரி சபாநாயகர் பதவி கிடைக்காததற்கு சட்டமன்ற நடவடிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் புறக்கணித்துள்ளார். ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளருமான லட்சுமண நாராயணன் தனக்கு சபாநாயகர் பதவி தரவில்லை என்பதால் தனது அரசு காரை சட்டசபை செயலர் வின்சென்ட் ராயிடம் ஒப்படைத்தார்.
'சபாநாயகர் பதவி கொடுங்க..!' - எம்எல்ஏ ஆதரவாளர்கள் தர்ணா! - எம்.எல்.ஏ
புதுச்சேரி: சபாநாயகர் பதவி வழங்காததை கண்டித்து முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
pudhucherry mla
லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு தகுதி இருந்தும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியை வழங்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவை வளாகத்தில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சட்டப்பேரவை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.