பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த புதுச்சேரிமாநிலம், இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்து கேட்பு வாக்குப்பதிவு 1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி புதுச்சேரி கீழுர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த ஓட்டெடுப்பில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினரும் வாக்களித்தனர். இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி 'புதுச்சேரி சுதந்திர தினம்' கீழுர் நினைவு மண்டபம் வளாகத்தில் கொண்டாடப்படுகிறது.