துண்டு பிரசுரங்களை செய்தித்தாள்களில் வைத்து விநியோகிப்பதற்கு புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது. இதன் மூலம் கோவிட்-19 தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறி இந்த தடையை அம்மாநில அரசு விதித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது கோவிட்- 19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ளது.