புதுச்சேரியில் வசித்து வந்த 28 உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் புதுச்சேரி அரசின் பிஆர்டிசி பேருந்து மூலம் இன்று (ஜூன் 1) சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கிருந்து ரயில் மூலம் அவர்கள் உத்தர காண்டிற்கு செல்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த புதுவை அரசு!
குடிபெயர்ந்த தொழிலாளர்களை புதுச்சேரி அரசு அவரவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.
புதுச்சேரி
இந்த நிகழ்வின்போது துணை ஆட்சியர் தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை செயலர் முனுசாமி, துணை வட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.