புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கைலாஷ் மானசரோவர் புனித பயணிகளுக்கு ரூ. 50,000 நிதியதவி - முதலமைச்சர் நாராயணசாமி - narayansamy
புதுச்சேரி: கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
![கைலாஷ் மானசரோவர் புனித பயணிகளுக்கு ரூ. 50,000 நிதியதவி - முதலமைச்சர் நாராயணசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3956728-thumbnail-3x2-narayansamy.jpg)
அதேபோல், இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதை நிறுத்திவிட்டபோதிலும், புதுச்சேரி அரசு அதனை தொடர்ந்து வழங்கி வருவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியை டெல்லியில் சந்தித்தபோது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் எதுவும் பரிந்துரையில் இல்லை என்று அவர் கூறியதாகவும், இது மாநில மக்களின் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும அப்போது அவரிடம் வலியுறுத்தியதாக நாராயணசாமி தெரிவித்தார்.