புதுச்சேரியில் இயங்கி வரும் அரசு சாராய வடிகால் அலையிலிருந்து ஊரடங்கின்போது பத்து லட்சம் லிட்டர் சாராயம் கள்ளத்தனமாக விற்றதாக சாராய வடிகால் துறை தலைவராக உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயவேணி மீது புகார் ஒன்றை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சாராய வடிகால் துறை தலைவர் விஜயவேணி, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தனது மீது சுமத்தியுள்ளது புகார் பொய் புகார் என்றும், தான் வகிக்கும் வாரிய தலைவர் பதவி மற்றும் புதுச்சேரி அரசு சாராய வடிகால் துறை மீதும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பொய்யான புகாரை அவர் தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.