மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில்,17 சாக்கு மூட்டைகளில் 1,020 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் இருப்பது தெரிய வந்தது.
17 சாக்கு மூட்டைகளில் 1020 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் பறிமுதல்! - Confiscated from Mayiladuthurai
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட பாண்டிச்சேரி சாராய மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Pondicherry Liquor
பறிமுதல் செய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம்
உடனடியாக காவல்துறையினர் சாராயம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, கார் ஓட்டுநரை கைது செய்தனர். காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விஷ்வநாதன் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், விற்பனைக்காக காரைக்காலில் இருந்து கும்பகோணம் கடத்தி சென்றது தெரிய வந்தது. மேலும் தப்பியோடிய ஓருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.