புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கு பொது நோயாளியின் வருகை குறைந்து வந்தது. இச்சூழலில் ஒரு மாதமாக நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சைப் பிரிவிலும் சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரத்தம் இன்றித் தவிக்கும் ஜிப்மர் மருத்துவமனை! - பாண்டிச்சேரி
புதுச்சேரி: கரோனா பயத்தால் ரத்தக் கொடையாளர்கள் யாரும் மருத்துவமனை வராததால், ஜிப்மர் மருத்துவமனையில் ரத்தத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
pondicherry jipmer hospital issue
இவ்வேளையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நோயாளிகள் ரத்தமின்றி அவதிப்பட்டு வருவதாகவும், வங்கியில் ரத்த இருப்பு குறைவதால் ஜிப்மர் நிர்வாகம் தவிப்பதாகவும் ஜிப்மர் மருத்துவமனை செவிலி காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.