இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 1,184 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 1,017 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வீடு வீடாகச் சென்று மருத்துவர்கள் பொதுமக்களிடம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனையானது இன்னும் மூன்று தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது.
கரோனாவைக் கண்டறிய ‘4,000 ரேபிட் டெஸ்ட் கிட்’ - புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் - புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி: கரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டறிய ‘4,000 ரேபிட் டெஸ்ட் கிட்’ வந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரியில் ஆறு பேரும், மாஹே பகுதியில் இரண்டு பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் மாஹே பகுதியில் ஒருவர் குணமடைந்து மற்றொருவர் மரணமடைந்தார். புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேரில் ஏற்கனவே ஒருவர் குணமடைந்த நிலையில் மீதமுள்ள ஐந்து பேரில் இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகிறார். நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர்
கடந்த 17 நாள்களில் கரோனா வைரஸ் பாதித்த ஒருவர்கூட புதுச்சேரி மாநிலத்தில் இல்லை. கரோனா வைரஸ் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொறுத்தவரை புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கரோனா தொற்றை விரைவில் கண்டறிய ‘4,000 ரேபிட் டெஸ்ட் கிட்’ வந்துள்ளது” என பேசினார்.
இதையும் படிங்க: ராமோஜிவ் ராவ் சேவை தனித்துவமானது - சிரஞ்சீவி
Last Updated : Apr 18, 2020, 4:39 PM IST