தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த அமைச்சர் - ஆரம்ப சுகாதார நிலையங்கள்

புதுச்சேரி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோய் கண்டறியும் பரிசோதனை கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார்.

ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

By

Published : Apr 22, 2020, 3:26 PM IST

புதுச்சேரிக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர் (RTPCR) பரிசோதனை செய்யும் கருவிகள் நான்காயிரம் வந்துள்ளன. இக்கருவியை கொண்டு கரோனா தொற்று இருப்பது குறித்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் இக்கருவி புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

இதையடுத்து புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இக்கருவி வழங்கப்பட்டு பொதுமக்களுக்களிடம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் பரிசோதனையின் முடிவு 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சமூக இடைவெளி விட்டு பரிசோதனை செய்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அந்த மருத்துவமனையில் கருவியின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். அவர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மருத்துவ பரிசோதனைக்கு வந்திருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அந்த மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள் குறித்தும் கேட்டறிந்து விரைவில் அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details