புதுச்சேரி விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பேராசிரியர் சத்யா உள்ளிட்ட மாணவர்கள் செவிலியர் பணி செய்யும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோவின் வெல்லோட்டம் புதுவை சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்தது. அப்போது செவிலியருக்கு பதிலாக நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து, உணவு வழங்குவது, கிருமி நாசினி தெளிப்பது, நோயாளிகளை தொடாமல் உடலின் வெப்பநிலையை அளவெடுப்பது உள்ளிட்ட பணிகள் ரோபோ மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.