தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளியே சுற்றினால் முழு ஊரடங்கு - புதுச்சேரி முதலமைச்சர் - pondicherry chief minister narayanasamy

புதுச்சேரி: மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடி அரசு உத்தரவுக்கு கட்டுப்படவில்லை எனில் முழு ஊரடங்குக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி முதலமைச்சர்

By

Published : Apr 25, 2020, 11:57 AM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 15 நாள் பரிசோதனையில் எவருக்கும் கரோனா தொற்று இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு புதுச்சேரியில் பாதுகாப்பினை உருவாக்கி இருக்கின்றோம். எனக்கும், அமைச்சர்களுக்கு பரிசோதனை செய்தபோது தொற்று இல்லை என்று வந்துள்ளது.

இந்நிலையில் காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்தவாரம் பத்திரிகையாளர்க்ளுக்கு கரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.

புதுச்சேரி அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் துணை நிலை ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அலுவலர்களுக்கு நேரடியாக வேலை கொடுத்து தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றார்.

காவல் துறையினர் இரவு, பகல் வேலை செய்தாலும் பலர் அவர்கள் மீது பழி சுமத்தி வருகின்றனர். இதனை சரிசெய்ய காவல் துறை தலைவரிடம் தெரிவித்துள்ளேன்.

புதுச்சேரி முதலமைச்சர்

காலை நேரங்களில் பொதுமக்கள் பலர் வெளியே வருகின்றனர். பலர் அரசின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதேபோன்று வந்துகொண்டிருந்தால் அதுபோன்று புதுச்சேரியிலும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த மாதிரியான நேரத்தில்தான் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. ஒருவருக்கொருவர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். புதுச்சேரி மக்கள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும். வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியே திரிந்து கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க: மக்கள் தொடர்பு துறையின் வேலையை காவல் துறை ஏன் செய்ய வேண்டும்?

ABOUT THE AUTHOR

...view details