புதுச்சேரி, மூலக்குளத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை தற்போது கற்பமாகியுள்ளது. இதையறிந்த வீட்டின் உரிமையாளர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து, தான் ஆசையாக வளர்த்த செல்லப்பிராணி பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.
அதில், பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீட்டில் இருந்த சிறுமிகளும், பூனைக்கு நலங்கு வைத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.