தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்தியாவுடன் பயனுள்ள ஆலோசனை' - அமெரிக்கா - mike pompeo jaishankar speak over phone on corona

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் தான் பயனுள்ள ஆலோசனை மேற்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளனர்.

corona virus state secretary
corona virus state secretary

By

Published : Mar 16, 2020, 12:08 PM IST

Updated : Mar 17, 2020, 9:27 AM IST

இது குறித்து ட்விட்டரில் பாம்பியோ, "கொரோனா வைரஸ் பரவலை ஒன்றுசேர்ந்து எதிர்கொள்வது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பயனுள்ள ஆலோசனை மேற்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இருவரும் மார்ச் 14ஆம் தேதி தொலைபேசி மூலம் இந்த ஆலோசனையை மேற்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஆர்டாகஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்தப் பெருந்தொற்று காரணமாக உலகளவில் இதுவரை ஐந்தாயிரத்து 800-க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 ஒரு 'பெருந்தொற்று' என ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

Last Updated : Mar 17, 2020, 9:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details