தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதே டெல்லியில் காற்றுமாசு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் டெல்லியில் காற்று மாசு பெருமளவு குறைந்து, காற்றின் தரம் மேம்பட்டது. இருப்பினும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் வழக்கம்போல இயங்க தொடங்கிவிட்டன.
இதன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமானது. உட்சபட்சமாக நேற்று (அக் 13) டெல்லியில் காற்றின் தரம் 306 என்ற மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.