இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
542 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு! - தேர்தல் ஆணையம்
டெல்லி: நாட்டில் வேலூர் மக்களவைத் தொகுதியை தவிர்த்து, 542 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
இந்நிலையில், மே 19ஆம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல், ஏழு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட 59 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் பணம் பட்டுவாடா புகார் எதிரொலியால் அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மீதம் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.