தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஃபரிதாபாத் வாக்குச்சாவடியில் வாக்களிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது - வாக்களிப்பதை கணொளி எடுத்த

ஹரியானா: ஃபரிதாபாத் வாக்குச் சாவடியில் பெண்கள் வாக்களித்ததை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்த பூத் ஏஜெண்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணொளி எடுக்கும் செல்போன்

By

Published : May 13, 2019, 10:38 AM IST

ஹரியானா மாநிலத்தில் நேற்று ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஃபரிதாபாத் வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டாக இருந்த இளைஞர் ஒருவர், பெண்கள் வாக்களிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. இது மாநிலம் முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்களிப்பதை கணொளி எடுக்கும் இளைஞர்

தேர்தல் அலுவலர்கள் பணியில் இருந்த போதே இளைஞர் ஒருவர், பெண்கள் வாக்களிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குச்சாவடியில் சுமார் 64.46 விழுக்காடு வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details