தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி தேர்தல் முடிவு எதிரொலி - ஷஹீன் பாக்கில் புதுவித போராட்டம் - ஷஹீன் பாக் போராட்டம் டெல்லி

டெல்லி: சட்டப் பேர்வை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டக்காரர்கள் முகத்தில் கருப்பு துணிகளைக்கட்டி மௌனப் போராட்டம் நடத்திவருகினிறனர்.

Bagh
Bagh

By

Published : Feb 11, 2020, 5:04 PM IST

டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 63க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் நீண்ட நாட்களாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அப்பகுதிக்கு உட்பட்ட ஒக்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அமனதுல்லா கான் வெற்றிபெற்றுள்ளார்.

ஷஹீன் பாக் போராட்டக்காரர்களை குறிவைத்து அவர்களுக்கு எதிரான பரப்புரையை பாஜக தீவிரமாக மேற்கொண்ட நிலையில், அங்கு இன்று புதுவடிவ போராட்டத்தை போராட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.

முகத்தில் கருப்பு துணிகளைக் கட்டிக்கொண்டு தேர்தல் தீர்ப்பு வெளியாகும் தேதியில் மௌனப் போராட்டத்தில் ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், ' நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்லர், அமைதி மட்டுமே இங்கு நிலவும்' என்ற பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜி.எஸ்.டி வரி குறித்து புதிய அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details