தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

65 வயதானாலே தபால் வாக்கு- இந்திய தேர்தல் ஆணையம் - டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி: தபால் வாக்கு தொடர்பான விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

political-parties-consulted-on-extending-postal-ballot-categories-eci
political-parties-consulted-on-extending-postal-ballot-categories-eci

By

Published : Jul 2, 2020, 7:07 PM IST

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றிலிருந்து குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு முடிந்த பிறகு, தேர்தலை சந்திக்கும் முதல் மாநிலமாக பிகார் உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க பல்வேறு விதிமுறைகளை மாற்றி அமைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 80 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தபால் வாக்குகளை தற்போது 65 வயதிலிருந்தே பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பிகார் தேர்தலுக்கான தேர்தல் நடைமுறைகளை கருத்து குழு மாற்றி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியிருந்தார்.

யெச்சூரியின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், தபால் வாக்குகளை அதிக பிரிவுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கான முடிவு குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் பிகார் தலைமை தேர்தல் அலுவலர் கூட்டிய கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட விவரங்களையும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இந்தாண்டு பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டதாக கூறியுள்ளது. இந்த கரோனா அசாதாரண சூழ்நிலைகளை ஆணைக்குழு கருத்தில் கொண்டு, மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியை விரிவாக்க ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details