முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவரின் உடல் டெல்லியில் உள்ள லோதி மின் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்தத் தலைவர் அத்வானி உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்! - சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சுஷ்மா ஸ்வராஜ்
முன்னதாக, வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் மரியாதை செலுத்தினர்.