தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மக்கள் சந்திப்பைத் தவிர்க்க வேண்டும்' - புதுச்சேரி பேரவைச் செயலர் - புதுச்சேரி பேரவைச் செயலர் சுற்றறிக்கை

புதுச்சேரி: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் பொதுமக்களுடன் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என பேரவைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

Political leader should be avoid public meeting
Political leader should be avoid public meeting

By

Published : Mar 19, 2020, 5:59 PM IST

Updated : Mar 19, 2020, 8:53 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் கரோனா வைரஸ் விழிப்புணர்வு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

புதுச்சேரி சுகாதாரத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தலின்படி, கரோனா மிகுந்த ஆற்றலுடன் உடனே பரவக்கூடிய கிருமி என்பதாலும், இதனுடைய தாக்கம் 170 நாடுகளில் உணரப்பட்டு இருப்பதாலும் இதனைக் கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகப் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இதனைத் தவிர்க்கும் விதமாக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும் அவசியமற்ற வகையில் பொதுமக்களைக் கூட்டுவதையோ அல்லது சந்திப்பதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொகுதி மக்களுக்கு பேஸ்புக், வாட்ஸ்அப், தொலைபேசி போன்ற ஊடகங்கள் மூலம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Last Updated : Mar 19, 2020, 8:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details