தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கண்ணியமான நடத்தை, உறுதியான செயல்'- மகேஷ் பகவத் ஐபிஎஸ் சிறப்பு பேட்டி! - ஈடிவி பாரத்

ஹைதராபாத்: கரோனா வைரஸ் ஏற்படுத்திய நெருக்கடி நிலையிலும் சுகாதார சேவை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு கிடைக்க காவலர்கள் உறுதி செய்கிறார்கள் என்று கூறிய தெலங்கானா மாநில ராச்சகொண்டா சரக காவல் ஆணையர் மகேஷ் பகவத் ஐபிஎஸ், முழு அடைப்பை கண்டிப்பாக அமல்படுத்தவும், அதே நேரத்தில் குடிமக்களிடம் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

Rachakonda police commissioner  Police interview  Telangana commissioner  ஹைதராபாத் ஐபிஎஸ் பேட்டி  ஈடிவி பாரத்  ஐபிஎஸ் மகேஷ் பகத் பேட்டி
Rachakonda police commissioner Police interview Telangana commissioner ஹைதராபாத் ஐபிஎஸ் பேட்டி ஈடிவி பாரத் ஐபிஎஸ் மகேஷ் பகத் பேட்டி

By

Published : May 2, 2020, 5:36 PM IST

Updated : May 3, 2020, 12:29 AM IST

நாடு முழுவதும் பரவியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கடுமையான ஊரடங்கை செயல்படுத்த காவல் படைகள் முன்னணியில் உள்ளன. இதற்கிடையில், ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் ஐபிஎஸ் ஈடிவி பாரத்துடன் பேசினார்.

அப்போது நம்மிடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறுகையில், “எந்தவொரு நிகழ்வையும், எதிர்த்துப் போராட காவல்துறை எப்போதும் தயாராக இருக்கிறது. மாநில நிர்வாகம் காவல்துறையினருக்கு நிதி ஆதாரங்களையும், இதர பிற இயக்க வசதிகளையும் வழங்கியது. முழு அடைப்பை கண்டிப்பாக அமல்படுத்தவும், அதே நேரத்தில் குடிமக்களிடம் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

குடும்ப வன்முறைகள் தொடர்பாக பதில்

நமக்கு இரு வாய்ப்புகள் உள்ளன. பயணத்தின் மூலத்தை அடையாளம் காண்பது மற்றும் சம்பந்தப்பட்ட கடுமையான தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகள். முதல்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களையும், ஜமாஅத் பங்கேற்பாளர்களையும் சோதித்து பார்ப்பது ஒரு சவாலாக இருந்தது.

எவ்வித தொற்று பாதிப்பும் இல்லாமல், மருத்துவமனைக்குச் சென்று தொற்றுப் பாதிப்புக்கு ஆளானவர்களும் உள்ளனர். மருத்துவமனைக்கு தொடர்பில்லாதவர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவமனை செல்வதால், கோவிட்-19 சமூக பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. (உதாரணமாக அவர் சில நிகழ்வுகளையும் சுட்டிகாட்டினார்)

இந்த நெருக்கடியான காலத்தில் காவல்துறையின் பங்களிப்பு குறித்து மகேஷ் பகவத் ஐபிஎஸ் பேசுகையில், “காவல்துறையின் பங்கு முழு அடைப்பை திறம்பட செயல்படுத்துவது. மற்றொருபுறம், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் பணிவாக நடப்பது ஆகும். சுகாதார பணியாளர்கள் சுகாதாரத்தைப் பேணுவதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தொந்தரவின்றி கிடைக்கவும், காவலர்கள் உறுதி செய்தனர். காவல் துறையினரும், அடிக்கடி வைரஸ் பரிசோதனை, முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் இதர சுகாதார விதிகளை கடைப்பிடிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

'கண்ணியமான நடத்தை, உறுதியான செயல்'- மகேஷ் பகவத் ஐபிஎஸ் சிறப்பு பேட்டி

55 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் உடல் பலகீனமானவர்கள், நிபந்தனை பேரில் பணிபுரிபவர்கள் ஆகியோர் முன்னணி கடமைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். கடமையில் இருக்கும் செயலில் உள்ள காவல்துறையினர் அத்தியாவசியச் சேவைகள் எந்த தாமதமும் இன்றி, மக்களை சீராக சென்றடைவதை உறுதி செய்கின்றனர்” என்றார்.

Last Updated : May 3, 2020, 12:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details