'இளம்பிள்ளை வாதம்' எனப்படும் போலியோ நோயினை ஒழிப்பதற்கான போலியோ சொட்டு மருந்து முகாம், இன்று (ஜன.31) நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் தொடங்கிவைத்தார்!
புதுச்சேரி: மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
அதன்படி, புதுச்சேரியில் 88 ஆயிரம் குழந்தைகளுக்கு 453 மையங்களில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படவுள்ளது. இந்தப் பணியில் 2 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாஹேயில் 19, ஏனாமில் 22 மையங்கள் என மொத்தம் 453 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நெல்லிதோப்பு லெனின் வீதியில் அமைந்துள்ள மணிமேகலை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.