ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புட்கம் மாவட்டத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரது உடல் கிடப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர்: மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கண்டெடுப்பு! - மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் உடல்
ஸ்ரீநகர்: புட்கம் மாவட்டத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
![ஜம்மு-காஷ்மீர்: மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காவலர் உடல் கண்டெடுப்பு! policeman-found-dead](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9439147-1000-9439147-1604568410307.jpg)
policeman-found-dead
பின்னர், அது குறித்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பாரமுல்லா மாவட்டம் பரிஹாஸ்போராவில் காவலராக பணிபுரிந்து வந்த இஷ்பாக் ரதர் என்பதும், அவர் நேற்று(நவ.05) மாலை தனது வீட்டிலிருந்து மாயமானதும் தெரியவந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:பிரிவினைவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடும் மோதல்