புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதியில் மரப்பாலம் சிக்னல் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனம் திருடிய ரமணா என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருடிய வாலிபரை கோவிட் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடைய சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த இளைஞருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.