தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ம.பி.யில் எரிந்துகொண்டிருந்த உடலை மீட்டு காவலர்கள் விசாரணை - எரிந்த நிலையில் உடல் மீட்பு

போபால்: கணவரின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இறுதி சடங்கின் போது தகனத்தில் எரிந்த நிலையிலிருந்த உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

cremation-and-take-dead-body-for-autopsy
cremation-and-take-dead-body-for-autopsy

By

Published : Oct 12, 2020, 3:31 PM IST

Updated : Oct 12, 2020, 3:40 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்சிங்-ரேகா பாய் தம்பதி. ரேகா பாய் கடந்த மாதம் தனது தாயார் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், ரேகா பாய்க்கு, பிரேம்சிங் உடல்நலக்குறைவு காரணமாக அக்.10ஆம் தேதி உயிரிழந்துவிட்டாதவும், அடுத்தநாள் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

அதையடுத்து கணவர் வீட்டிற்கு விரைந்த ரேகா பாய் உயிரிழப்பு குறித்து உறவினர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதி காவல் துறையினரிடம் கணவரின் உயிரிழப்பில் சந்தேகமிருப்பதாக புகார் அளித்தார்

இதற்கிடையில் பிரேம்சிங்கின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்தனர். உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் பாதி எரிந்த நிலையிலிருந்த உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தகனம் செய்யப்பட்ட உடல் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

Last Updated : Oct 12, 2020, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details