மேற்கு வங்க மாநிலம் பதுரியாவில் இன்று உள்ளூர் வாசிகளுக்கு காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் கூட்டமாக வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் தங்களுக்கு முறையாகச் சேரவில்லை என சாலையில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கும்பலைக் கலைக்க மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.